Saturday, March 21, 2015

வெறுமை

இருட்டிய இரவில்
மனதின் ஆழம்
கண்மூடித் தேட
தெரிந்தது உன்முகம்
அல்ல,
வெறுமை!!!

சிறுபிள்ளை செல்லும் ஓடி
பஞ்சடைத்த மேகம் என்று
ஏதோ இன்பம் கொண்டு
அறியாது,
பின்மறையும் சுவடு இன்றி

அதுபோல்!!!

!!!!!

விழியின் ஓரம்
சிறுநகை இன்று
புரிந்தது பின்பு
காதல் கொண்டது
மனமென்று!!

தள்ளி நில் என்றேன்
அலைபாய்ந்தது அதுவோ
என் சொல் கேளாது...

அறியவில்லை நான்
வரையறை இல்லைத் துளியும்
இந்தக் காதல் வந்திறங்க
இடிபோல் மனதில்!!

தவிப்பும் புதிதாய்,
ஆசை கொள்ள
இதயம் துடிக்க,
ரயில்போல் மெல்ல
தீராத தாகம்!!

தென்றல் அனுபவம்!!!

பொய் வாழ்வு

வேடிக்கை விளையாட்டு
சிலர் வாழ்க்கை இவ்வுலகில்
காதல் பகையாக,
பகை அன்பாக,
மாறுவதேனோ!
தவம்போல் வேடமிடும்
மனிதரும் இங்கே
உயிர்தர தயங்கா
நண்பருமே....

புன்சிரிப்பில் மயக்கி
தேன் சொல்லில் ஈர்த்து
பொய் வாழ்வு கொண்டு
என்ன அடைந்தார் என்றே?!
சித்தம் குழம்ப
பின் தெளிந்தது மனம்

இதுவும் நாடகமே!!!

கற்பனை நினைவு

கை கொண்டு கண் மூடி
சிந்தனை ஒதுக்க
எத்தனித்தேன்...
ஆயிரம் படமாய்
உன் முகம் தெரிய...
கட்டி அணைத்தேன்!!
கற்பனை நினைவு

சுகம் சுகமாக!!!